கவிதையாய் என் காதல்..

காதலுக்கு பூக்கள் அழகான பரிசு என்றாய்
ஒருவனுக்கோ, ஒருத்திக்கோ காதலைவிடவும்
சிறந்த பரிசு இருக்க முடியாதென்றேன் ...

காதல் ஒருவழிப் பாதை போகலாம் திரும்ப
முடியாது என்றாய்.காதல் ஒரு வலியான
பாதை ஆனால் எல்லோரும் அதனுள்
போகின்றார்கள் என்றேன்
நான்..

மலையின் மேல் மேகம் உரசும்
போதெல்லாம் காதலுக்கு மகுடம்
சூட்டுவதாய் சொன்னாய் இல்லை
காதலுக்கு முத்தமிடுவதாக சொன்னேன்
நான்..

கரைக்கு வருகின்ற அலைகள் எல்லாம்
காதலைத் தேடுவதாகச் சொன்னாய்
நீ வரும்போது மட்டும் காதலைக்
கௌரவிப்பதாக மனசு
சொன்னது...

ஒவ்வொரு காதல் வெற்றி பெறும்போதும்
ஒரு நட்சத்திரம் பிறப்பதாகச் சொன்னாய்.
உன்னை காதலிப்பதற்காகவே பிறந்த
நட்சத்திரம் நான் என்று காதல்
சொன்னது..

காதல் சொல்ல சிறந்தது கவிதை என்றாய்
ம்ம்ம்.கவிதையை நானும் காதலிக்க
ஆரம்பித்தேன்..

காதல் சொல்ல பரிசுகளோடும் பூவோடும்
வந்தேன் நான்.காதல் சொல்ல மனசோடு
மட்டும் வந்தாய் நீ ...

காதல் சொல்ல இதயம் போதவில்லை
என்றாய் உன் ஒருத்தி வருகையில்
நிறைந்தது இதயம் என்றேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72