விதைக்கப்படும் முதல் (க)விதை..!

கனத்த நடு நிசி விழிகள் திறந்து
மூடுவதை போல சாளரங்களின்
தாள்கள் நிசப்தத்தின் ரீங்கரத்தில்
உறங்கிக்கொண்டிருந்தன..!

கனவுகள் தொலைக்கப்பட்ட
சிட்டுக்குருவிகள் இரண்டு
தனிமையின் கணங்களை
வலிமையான நாழிகைக்குள்
வலைவீசி விதைக்கப்பட்ட
நினைவுகள் தேடிக்கொண்டிருந்தன..!

முளைவிட்ட நினைவுகள் மட்டும்
அகப்பட்டுக்கொள்ள எஞ்சியவை
மீண்டும் எச்சங்களாக மண்ணில்
ஒட்டிக்கொள்ள..!

ஒவ்வொன்றும் மண்ணின்
கருப்பையில் சூல்கொண்டு
உறுதியான உயிர் பெறுகின்றது ..!

இதுவே வித்துக்களால் விதைக்கப்படும்
முதல் (க)விதை..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72