எண்ணத்தின் ஆழத்தில் ஜனிக்கும்
ஜீவன்கள் மறுபடியும் பிறப்பதில்லை
அவை எண்ணுவதெல்லாம்
ஜீவன்களாகவே இருப்பதனால்..!
மறுபடியும் மறுபடியும் வேர்விடும்
நினைவுகள் எல்லாம் உயிர் நாளத்தின்
மடியில் உறங்கும்போது உள்ளத்தின்
கனதி நீட்சி பெறுகின்றது..!
வேரின் உறுதியில் நிழல் கொள்ளும்
ஆல விருட்சம் போல் நட்பின் நிழல்
குடைக்குள் ஒளிந்து கொள்கிறது
இரு மனங்கள்..!
கரைகளை தொலைத்து விட்டுநுரைகள்
மேல் தேடும் அலைகளை போல்
காத்திருக்கும் மனங்களின் தவிப்பு..!
நிமிடங்கள் நாளிகைகள் மேல்கோபம்
கொள்கிறது காத்திருப்பின் ஜனனத்தை
கடந்து செல்வதால்..!
பூவிதழ் போர்த்திய மென்மையின்
போர்வைக்குள் மெல்லிய பனித்துளிகள்
அவை பூவையர் சூடிடும் கூந்தலின்மேலொரு
நாட்டியம் போட்டிடுமோ..!
'ஆ' முதல் 'கா' வரை ஆசைகள்
மேலெழும் ஆய்த பூஜையிலே பல
ஆவணம் ஆகிட மானிடம் யாவினும்
மா''மகள் போற்றிடுமே..!
நினை''வலைகளை தொலைத்துவிட்ட
இதயம் மெது மெதுவாய் புலம் பெயர்கின்றது
கரைகள் நீண்டு சென்றாலும் கழுவப்பட்ட
கால்த் தடங்களின் ஆழங்களுக்குள் என்
கண்ணீர்த்துளிகள் நிறைந்து கொள்ள உன்
விழிகளால் செதுக்கப்பட்ட காதித தெப்பமொன்று
தடம் புரள்கின்றது..!
சுவாசங்களின் பிணைப்பால் சூழ்ந்து
கொள்ளப்படும் நாடித்துடிப்புக்கள்
ஒவ்வொன்றும் நிறுத்தி வைக்கப்பட்ட
கடிகார முட்களின் நகர்வுக்காய்
காத்திருக்கிறது..!
முள்ளில்லாத பாலைவனத்தின்
முற்றத்தில் கொட்டிக் கிடக்கிறது
முகவரிகள் தொலைத்த நட்பின்
காகிததாள்கள்..!
உன் ஆய்த எழுத்தினால் ஏவப்பட்ட
வாணங்கள் ஒவ்வொன்றும் குறி
தவறாமல் தைத்து விடுகின்றது என்
உயிரோடு இணைந்த மெய் மீது ..!
உதிர்ந்து போன மலரை கேட்டேன்..!
உன் உறக்கத்திலும் உறுதி கொள்கிறாயே
எப்படி ..?
உதிர்வது இதழாக இருந்தாலும் தன்
உதிரத்தில் உரமாய் உயிரணு
உறைந்திருக்கிறதே .
அழகாய் சொன்னது ..!
உன் சுவாசங்களை முகவரிகள்
இல்லாமல் காற்றில்லா [பிர]''பஞ்சத்துக்கு
அனுப்பிவை அங்கும் வறுமையின்
நிழலில் உயிர் பெறுவாய்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment