எதிர்பாராத தருணம்...

எதிர்பாராத தருணம் அது
மழை வீழ்ந்து சிதறியது..
கண்டதில் மகிழ்ந்தது நானும்
கண்டதில் அதிர்ந்தது நீயும்..
எதிர்பாராத சந்திப்பு அது
பூச் சொரிந்தன தேவதைகள்
பேச வார்த்தைகளுடன் நானும்
வார்த்தைப் பூட்டுக்களுடன் நீயும்..
எதிர்பாராத நேரம் அது
நான்கு விழிகளில் மின்னல்
காதல் கொப்பளிக்க நானும்
கோபம் கொந்தளிக்க நீயும்...
கடைசி வார்த்தைகள்...
கடைசிப் பார்வைகள்...
கடைசிப் சந்திப்பு
இருவரும் பிரிந்தோம்
காதலை அங்கே விட்டு
இறங்கும் போது கவனித்தால்
என்னுடன் உன் காதல்Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72