தணலில் பூர்த்த மலர்கள்..

தணலில் பூர்த்த மலர்கள்-இவர்
தலைவன் வளர்த்த பயிர்கள்
உரங்கள் ஏதுமின்றி உயர வளர்ந்த
மரங்கள்...

எரிந்து கிடந்த நிலத்தை செழிப்பாய்
மலர வைத்த தெரிந்து கொள்ள
முடியா உயர்ந்த மனிதர் இவர்கள்..

காற்றை விடவும் வேகம்
கணக்கிட முடியா தாகம்
நீறு பூர்த்த நெருப்பு -இவர்
நினைத்தால் எரியும்-பகை
இருப்பு...

தோற்றம் பார்த்தால் இறுக்கம்
அது பழகி பார்த்தால் தெரியும்
பூர்த மலரை விடவும் மென்மை
இவரின் இதயம்...!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72