கங்கை ஆனவள்..

கங்கை முடிதரித்து
காவிரி கரை அருகே
மங்கை நின்றாள் ..

அவள் மஞ்சள் நீர்
விரிப்பும் மனதில்
மத்தாப்பும் மடியில்
மணம்கமழ தங்க
தகதகப்பில் அங்கம்
இறக்கி அன்னநடை
நடந்துவந்தாள்..

கொங்கு தேன் நிலவில்
கொட்டுகின்ற கடும்
பனியில் கொஞ்ச நேரம்
உட்கார்ந்து கொஞ்சி
குலவியது நெஞ்சம்
எங்கும் நினைவிருக்கு

அஞ்சுகின்ற விழிகளுக்கு
எஞ்சியவை இது மட்டும் தான்
நீ நெஞ்சில் குடியிருக்கும் வரை..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72