பூக்கள் விற்கும் ஏழை...

அறிமுகம் இல்லாமல் கடந்து
போன நாட்கள் ஒவ்வொன்றும்
என் நாட்குறிப்புக்கே சொந்தமாகி
விடுகின்றன..

ஒரு கூடை நட்சத்திர வெளிச்சத்தில்
வெள்ளை தாள்கள் நிரப்பப்பட்டாலும்
அவை உயிர் நிறைந்தவை மட்டுமே..

எதிரே தோன்றி தொலைவில் மறையும்
நிலவிடம் நீ தேய்ந்து கொள்வதாய்
அரட்டை அடித்து சிரிக்கின்றன நட்சத்திரங்கள்..

பூக்கள் விற்கும் ஏழைக்கு இவை புரிந்து கொள்ளுமா
எல்லாம் பூமியின் சூட்சுமத்தில் புரியாத புதிர் தான்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72