பறந்து பார்ப்போமா...?

சிறகினை விரித்திடும்
பறவையாகு_உன்
இறகுகள் சிலிர்த்திடும்
பறந்து பாரு..

அழகினை ரசித்திடும்
குழந்தையாகு_உன்
அருகினில் இருப்பவர்
இணைந்திடு வாரு..

மழையினில் நனைந்திடும்
குடையென மாறு_ உன்
மனதினில் நிறைந்தவர்
மகிழ்ந்திடு வாரு..

அலையின் மிதந்திடும்
நுரைகளை பாரு_உன்
வளையல்கள் உடைந்ததும்
கலங்கிய தாரு...

மலையினில் மோதிடும்
அருவிகள் நூறு_உன்
மடியினில் விழுந்திடும்
ஒரு துளி நீரு..

உலகினில் நீ ஒரு
உளி என வாகு_உன்
உரிமைகள் செதுக்கிடும்
சிலை அதை தேடு..

மரணமே முதுமையின்
மாளிகை வீடு_நீ
மரித்ததால் நிமிர்ந்தது
ஒரு பறவையின் கூடு...!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72