..காதல்..

காற்றில் கரையும்
என் வார்த்தைகளிலிருந்து
காதல் பறவைகள்
வானை உரசும்..

நேற்றின் இடுக்கிலுள்ள
நினைவுத் துளிகள்
மேகம் உடைத்து
மழையாய் வழியும்..

ஊற்றுக் கண்களாய்
உடைப்பெடுக்கும் உன் எண்ணம்
உயிரின் அணுக்களாய்
வெடித்துச் சிதறும்..

ஏற்றியிருக்கும் தீபச் சுடரில்
எண்ணெய் முடியும் வரையில்
ஒளிர்ந்து கொண்டிருக்கும்
உனக்கான இறுதி மூச்சு..

இனிக் காதலிக்க முடியாது
உன்னைப் போல் வேறு எவரையும்..
என்னைக் காதலிக்க முடியாது
உன்னைப் போல் வேறு யாரும்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72