முகவரி தேடும் அஞ்சல்கள்..

எங்கே மனம் அலைபாய்ந்து
போகிறதோ அங்கே உணர்வுகள்
கொய்யப் படுகின்றன..

உன் எண்ணங்களை சலைவை
செய்து வாழ்க்கையின் தடங்களுக்கு
ஒத்தணம் கொடுத்துக் கொள்..

புரிதலின் ஆழம் அதிகரிக்கும் நீ
உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
ஈட்டி முனைகள் போல என்னை தாக்கி
சென்றன..

காயம் உள்ளே பலமானாலும் குருதி
வெளியே வரவில்லை என பொய்
சொல்லி சிரிக்கிறது உதடுகள்..

உன்னை குத்துவதற்கு என் மனம்
ஈட்டி முனைகள் அல்ல குத்திய
காயங்களுக்கு கட்டுபோடும்
மெல்லிய மனம் என்பதை உனக்கு
நான் அனுப்பிய தகவல்களின்
ஆழத்திலிருந்து கண்டுகொள்வாய்..

எனக்காய் ஒரு தடவை உன் கணணி
வலையில் பின்னப்பட்ட பின்னல்களின்
சாளரம் திறந்து அனுப்பிய அஞ்சல்களை
சரிபார்த்துக் கொள் அங்கே என் முகவரி
எங்கு இருக்குமென முக்காடிட்டு விளி
துலங்குவாய்..

இதை எழுதும்போது எனக்குள்
நான் கேட்டுக் கொள்ளும் ஒரே
ஒரு வினா உனது அஞ்சல்
பெட்டிக்குள் பதிலாகின்றது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72