நிலா தூதுவன்..

இருள் கவிழ்ந்த பொழுதில்
உறக்கம் கலைந்து விழித்துக்
கொள்கிறது வெண்ணிலா..

மஞ்சள் தெளித்த மல்லிகை
தடாகத்தில் முகம் கழுவி
மேகங்களை விலக்கி
முகில்களின் ஓட்டத்தில்
கூந்தல் வாரிக் குதூகலிக்கிறது..

சற்றும் சலனம் இல்லாமல்
காற்றின் இடையில் சேலை
நெய்து அழகு பார்த்தபடி காதல்
சொல்ல காத்திருக்கையில்..

தேவலோகத்து தூதுவன் சபித்துக்..
கொள்கிறான் நீ என்னை கடந்து
பூமியில் இன்னொருவனை
காதலிக்கிறாய் இன்றுமுதல்
தேய்பிறை ஆகிடுவாய்..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72