தொலைந்து போன எனது நாட்கள்...

கூவுகின்ற குயில்களுக்கு தெரியுமா..
சங்கீதத்தின் ஸ்வரங்கள்..!

ஆடுகின்ற மயில்களுக்கு தெரியுமா...
நாட்டியத்தின் நயனங்கள்..!

ஓடுகின்ற மேகங்களுக்கு தெரியுமா
கால்களின் தடங்கள்..!

உட்கார்ந்த நிலைகளுக்கு தெரியுமா
அருவிகளின் சலனங்கள்..!

தேடுகின்ற தென்றலுக்கு தெரியுமா
தொலைத்து போன முகவரிகள்..!

அழுகின்ற மழைத்துளிகளுக்கு தெரியுமா
விளிகளின் வலிகள்..!

மலர்கின்ற மலர்களுக்கு தெரியுமா
தொட்டுச் செல்லும் தேனீக்களின்
காதலை..!

இத்தனையிலும் எதோ ஒன்று தெலைந்து
இருக்கின்றது..!

அந்த தொலைவில் தான் என்னை நான்
தேடுகின்றேன்..!
கிடைக்குமா.....?Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72