உயிர் பெறும் என் கவி...

கவிதை..
மனதின் மனிதனின்
மலர்களின் மௌனத்தின்
உள்ளிருந்து பிறக்குமாம் நீ
சொன்னாய்...

ஆம் ஒத்துக்கொண்டேன்
உன்னிலிருந்து பிறப்பதால்
தொடமுடியாத தூரத்தில்
இருக்கிறது என் மனம்
இருந்தாலும் தொட்டு
செல்கிறது ஒரு ஜீவனின்
குரல்..

நட்சத்திரங்கள் இல்லாத
இருண்ட வானத்தில்
இதமான வார்த்தைகளில்
எழுத்துக்கூட்டி என்
இதயத்தை வாசிக்கிறது
றஞ்சனமான அந்த
நிலவு..

இணையற்ற இணையத்தால்
இணைந்த என் எண்ணங்கள்
எல்லாம் நீயேயென்பதால்
சிந்தனைகளின் எல்லைகள்
தகர்த்தெறியப்பட்டுவிட்டன..

இப்போ நீ என் இதயத்தில்
துயில் கொள்கிறாய்..

ஒவ்வொரு நாளும் வந்து
வந்து போ என் புன்னகைக்கொரு
கவிதை சொல்லிவிட்டு அடுத்த
உன் வருகைக்காக காத்திருப்பேன்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72