எதிரொலிகள்..

மாலை வந்தது மலர்கள்
துவண்டன..

காலை வந்தது கனவுகள்
கலைந்தன..

கண்கள் மறைத்தன கனவின்
சுகத்தை..

விழிகளை மூடினேன் கனவும்
மறந்தது..

உன் பார்வை வீசிய காந்த
அலைகளில் நனைந்த என்
மனம் மௌனமாய் தூரத்தில்
தனித்தே தனித்து நிற்கிறது..

பனிக்கால மரங்களைப்போல்
பட்டுப்போன என் நட்பின்
வேர்களுக்கு மழைக்கால
மேகங்கள் கண்ணீர் அருவி
பாய்ச்ச..

எதேதோ எண்ண அலைகள்
என் இதயத்தை தாலாட்டும்..

இடையிடையே இடியும்
மின்னலுமாய் அலையும்
கடலுமாய் என் செவிகளில்
ஏதோ ஓர் எதிரொலி..!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72