யாசகம்...

சிந்து கவி வடித்து சித்திர
தேர் வடத்தில் உன் சின்ன
வளையல்கள் சில்லாய்
சுழன்றுவர..

வந்தது சாமியென வாசலில்
காத்திருந்து விஞ்சுகின்ற
என் விழிகளுக்கு விதைத்தது
வில்லொன்று..

சிந்தையில் நாணலும் சிந்திய
சீண்டலும் சில்லறை ஆனதோ
அவை வந்திடும் நாளிடை
வருகையில் நான் தினம்
நித்தமும் யாசகமே.!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72