தடங்கள்..

மௌனத்தின் நாழிகையாய்
நினைவுகள் மட்டும் நாட்களின்
ஜனனங்களை கையில் ஏந்தியவாறு
காலப்பெருவெளியின் மணற்பரப்பில்
நீள நடக்கிறது..

என் கால்களில் தட்டுப்பட்ட
மீளமுடியா நிழல் அலைகள்
இன்றும் காற்றின் மூச்சினால்
வீசி எறியப்பட்டு குருதியில்
கலந்துவிடுகிறது..!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72