சிலுவைகள்..

01.மரித்து விட்ட சிலுவைகள்
முன்னே தவம் கிடக்கின்றன
உயிர் உள்ள கல்லறைகள்.!

02.உயிர் உள்ள கல்லறைகள்
தம்மை கட்டிக்கொள்ள
சுமக்கின்றன ஆயிரம் ஆயிரம்
சிலுவைகள்.!

03.பிறப்பை எண்ணி வாழ்ந்திட்ட
ஜீவன்கள் பிறக்குமுன்னே
இறப்பிற்கான கல்லறையில்
மரித்துவிடுகின்றன.!

04.மரிப்பதற்கு மனம் ஒன்றும்
சிலுவைகளால் சுமக்கப்பட்ட
மலர்வளையம் அல்ல..
அது உயிர் உள்ள கல்லறை.!
அது உன்னை மட்டும் சுமப்பதால்
உயிர் வாழ்கிறது.!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72