நந்தவனம்..!

01.கனவுகள் விழித்துக்கொள்ளும்
ஒரு புள்ளியில் சந்திக்கின்ற
உறக்கம் காதலை தட்டி
எழுப்புகின்றது விழித்துக்கொண்ட
காதல் மீண்டும் கனவு வராதா
என எண்ணி உறக்கத்தின் மடியில்
துயில்கொள்கின்றது..!

02.எழுதப்படுகின்ற எழுத்துக்களில்
ஆய்த எழுத்துக்கள் இருப்பதினால்
நாட்க்குறிப்பின் பக்கங்கள் உயிர் மெய்
பெறுகின்றது..!

03.குழைந்த கரும் கூந்தல்.
கொவ்விதழ் புன்சிரிப்பு.
கலை மறந்து செதுக்கிய.
சிலையாய் வதனம்.
கருவிழிகள் மை தீட்டும் இமைகள்.
கவலை கலைந்து ரசிக்க தூண்டும் அழகு
வளைந்த வானவில் வளையல்கள்..
வருடிச்செல்லும் தென்றலின் சாயல்..
இவை அனைத்துமே பெண்மையின்
நயனம்..!

04.உள்ளங்கையில் துருவங்களின் வெப்பம்.
உணர்வுகள் நயனத்தின் சாயல்.
புருவங்கள் தூக்கிய விழிகள்.
பாதங்களில் சதங்கைகளின் காதல்.
பார்வைகளில் அக்கினி தீப்பிழம்பு.
பாவை இவள் சயனம் கொள்ள
உங்கள் பார்வைகள் தொலைவாகின்றன..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72